News December 6, 2025
உக்ரைன் போருக்கு மன்னிப்பு கேட்ட புடினின் சீக்ரெட் மகள்

உக்ரைன் போரை நிறுத்தச்சொல்லி தந்தையிடம் சிபாரிசு செய்யும்படி புடினின் சீக்ரெட் மகளாக அறியப்படும் லூயிசா ரோசோவாவிடம் செய்தியாளர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பதிலளித்த லூசியா, உக்ரைனில் நடக்கும் போருக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், போருக்கு தான் காரணமில்லை எனவும் போரை நிறுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News April 7, 2026
காரைக்குடி தொகுதியில் சீமானுக்கு புது சிக்கல்!

2021 தேர்தலில் நாதகவுக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் லோக்சபா தேர்தலில் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ள நாதகவுக்கு கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை ECI ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் சீமான் போட்டியிடும் காரைக்குடியில், இந்திய குடியரசு கட்சியின் கருப்பையாவுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது வாக்களர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கலாம்.
News April 7, 2026
BREAKING: மீண்டும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு?

ஈரானுக்கு டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்ததால் போர் பதற்றம் மீண்டும் உச்சத்துக்கு சென்றுள்ளது. இதனால் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடம் எழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் LGP சிலிண்டர் தட்டுபாடு இல்லை எனவும், பெட்ரோல் பங்க்களும் வழக்கம் போல் இயங்கி வருவதாகவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. நேற்று மட்டும் 6,500 டன் வர்த்தக LPG விற்பனை செய்யப்பட்டுள்ளது.
News April 7, 2026
IPL: இன்றும் மழை பாதிப்பு?

IPL-ல் இன்று RR, MI அணிகள் இடையிலான போட்டி கவுஹாத்தியில் நடக்கிறது. இதில் மழையின் குறுக்கீடு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலை 6 மணி அளவில் 21% மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அது டாஸ் நேரத்தில் 6% ஆக குறையும் எனவும் கூறப்படுகிறது. ஆடுகளத்தின் ஈரப்பதம் காரணமாக போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் ஓவர்கள் குறைக்கப்படும். ரத்தானால் நேற்று போல் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.


