News April 27, 2024
பாஜகவின் நிலைமை மேலும் மோசமாகும்

நாடு முழுவதும் இரண்டு கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டத் தேர்தல்களில் பாஜகவின் நிலைமை மேலும் மோசமாகும் என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். முதல் இரண்டு கட்டத் தேர்தலில் பாஜகவிற்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை எனக் கூறிய அவர், பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என பாஜகவினரே கூறுவதாக விமர்சித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
TN டி20 அணிக்கு வருண் சக்ரவர்த்தி கேப்டன்

சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் வரும் நவ.26 முதல் டிச.18 வரை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கான TN அணியில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாயாஜால சுழற்பந்து வீச்சால் அசத்தி வரும், வருண் சக்ரவர்த்தி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஜெகதீசன்,ஷாருக்கான், சாய் கிஷோர், நடராஜன், குர்ஜப்னீத் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
News November 14, 2025
தங்கம் விலை உயர்வு.. ஊரை காலி செய்யும் தொழிலாளர்கள்

தங்கம் விலை உயர்வால், மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தங்க நகை தயாரிப்பில் தேசிய அளவில் புகழ் பெற்ற கோவையில் மட்டும், போதுமான பணி ஆணைகள் கிடைக்காமல், பிற மாவட்டங்களை சேர்ந்த 10,000 பொற்கொல்லர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சுப நிகழ்வுகளுக்காக நகை வாங்குபவர்களால் மட்டும் ஓரளவு வியாபாரம் நடப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
News November 14, 2025
TN-ல் டெலிவரி வேலை செய்யும் இளம் டாக்டர்கள்

`உனக்கு என்னப்பா டாக்டரா இருக்க, நல்லா சம்பாதிப்ப’ என இனி சொல்லாதீர்கள். ஏனென்றால் TN-ல் இளம் டாக்டர்களின் நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இளம் டாக்டர்களுக்கு ₹15,000 தான் சம்பளமாக கிடைப்பதாகவும், ₹30,000-ஐ எட்டுவதற்குள் 30 வயது ஆகிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், கேப்/பைக் டிரைவர், டெலிவரி மேன் வேலைகளுக்கும் MBBS படித்த இளம் டாக்டர்கள் செல்லும் நிலை உள்ளதாம்.


