News December 6, 2025

தி.குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை: BJP

image

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதில் மதக் கலவரம் ஏற்படவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை என்ற அவர், இந்தியாவில் தானே அயோத்தி உள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். NDA கூட்டணியின் ஆட்சி ராமரின் ஆட்சியாகவே இருக்கும் என தெரிவித்த நயினார், சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபடுகிறீர்களா என திமுகவை சாடியுள்ளார்.

Similar News

News April 6, 2026

உங்க போன் இப்படி ஆச்சுனா… உஷார் மக்களே

image

இன்றைய சூழலில், யாருடைய போனையும் ஈசியாக ஹேக் செய்து விடலாம் என்ற நிலை உள்ளது. உங்க போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த Signs மூலம் தெரிஞ்சிக்கலாம் ➤போன் பேசும் போது, அசாதாரண ஒலிகள் கேட்கும் ➤ஆப்கள் தானே அடிக்கடி ஓபன் ஆகும் ➤போனில் ஏற்கெனவே யூஸ் பண்ண இணையதளங்கள், தற்போது ஓபன் போதும் வித்தியாசமாக தெரியும் ➤யூஸில் இல்லாத போதும் பேட்டரி சூடாகும் ➤போன் ஆப் ஆவதற்கும் நீண்ட நேரம் எடுக்கும்.

News April 6, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 6, பங்குனி 23 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்த்தி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

News April 6, 2026

ஒரே நாளில் 51 லட்சம் சிலிண்டர்கள் விற்பனை!

image

மேற்காசிய போர் சூழலுக்கு நடுவிலும் மார்ச் 23-ம் தேதி முதல் 6.6 லட்சம் 5 கிலோ சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. LPG சிலிண்டர்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றும், ஏப்.4-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 51 லட்சம் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 50,000-க்கும் மேற்பட்ட சிலிண்டர்களையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!