News April 27, 2024

ஈரோடு மாவட்ட மக்களுக்கு அலர்ட்

image

ஈரோடு மாவட்டத்தில் வெப்ப நிலை அளவு, இந்தியா அளவில், 2வது இடத்திலும், தமிழகத்தில் முதல் இடத்திலும் உள்ளது. எனவே ஈரோடு மாவட்ட மக்கள், கோடை வெப்ப பாதிப்புகளை தடுக்க காலை, 11 மணி முதல் மாலை, 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், இளநீர், பழச்சாறு போன்றவை பருகலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News

News October 20, 2025

ஈரோடு: வங்கிச் சேவை இனி வாட்ஸ்அப்பில்!

image

உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற இனி வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை; கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணைச் சேமித்து, ‘Hi’ என்று வாட்ஸ்அப்பில் அனுப்பினால் போதும். தேவையான அனைத்து விவரங்களும் வாட்ஸ்அப்பிலேயே வந்துவிடும். SBI 90226 90226, கனரா வங்கி 90760 30001, இந்தியன் வங்கி (Indian Bank) 87544 24242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) 96777 11234, HDFC Bank 70700 22222 : இதனை மற்றவர்களும் ஷேர் பண்ணுங்க

News October 20, 2025

ஈரோட்டில் நிலம் வாங்க போறிங்களா?

image

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்., 2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம், 4.பட்டாவுடன் ஆதார் இணைக்க, <>இங்கே கிளிக்<<>> செய்து ‘Aadhaar Linking for Patta’ பகுதியில் விவரங்களை உள்ளிட்டு OTP மூலம் உறுதிசெய்து இணைக்கலாம்.

News October 20, 2025

ஈரோடு: 7 கிராமங்களின் விநோத கொண்டாட்டம்!

image

ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு மக்கள் பட்டாசுகளே இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.அங்குள்ள பறவைகள் சரணாலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில், உள்நாட்டுப் பறவைகள் மட்டுமின்றி, சைபீரியா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக வெள்ளோட்டைச் சுற்றியுள்ள 6 கிராமங்களில் 19 ஆண்டுகளாக பட்டாசுச் சத்தம் கேட்பதில்லை

error: Content is protected !!