News April 27, 2024
மும்பை அணிக்கு இமாலய இலக்கு

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சரவெடியாக வெடித்துத் தள்ளிய டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய மெக்குர்க் 84, சாய் ஹோப் 41, ஸ்டப்ஸ் 48* ரன்கள் விளாசினர். இதையடுத்து MI அணிக்கு 258 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை தரப்பில் வுட், பும்ரா, சாவ்லா, நபி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
Similar News
News November 18, 2025
விஜய் + அதிமுக கூட்டணி… முடிவை தெரிவித்தார்

அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா என அண்மைக்காலமாக யூகங்கள் எழுந்து வருகின்றன. பாஜக இருக்கும் கூட்டணியில் தாங்கள் இடம்பெறமாட்டோம் என தவெக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், தவெக விரும்பினால் அவர்களுடன் கூட்டணி குறித்து EPS பேசுவார் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தவெக இடம்பெறுமா?
News November 18, 2025
தமிழ்நாட்டில் இவ்வளவு தங்கம் இருக்கா?

தங்கத்தை தமிழர்கள் ஒரு முதலீடாகவோ அல்லது அந்தஸ்தின் அடையாளமாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக, ஆபத்தில் உதவும் சேமிப்பாக கருதுகிறார்கள். அதனால் தான் சிறுக சிறுகவாவது தங்கத்தை வாங்கிட விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் உள்ள மொத்த தங்கம் எவ்வளவு தெரியுமா? 6,720 டன் தங்கம்! இது அமெரிக்க அரசின் தங்க இருப்புக்கு சமமானதாகும். ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா ஆகிய நாடுகளின் தங்க இருப்பைவிட அதிகமாம்.
News November 18, 2025
ரேஷன் கடைகளில் இலவச நாப்கின்.. HC-ல் மனுதாக்கல்

ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின் வழங்க கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு மெட்ராஸ் HC உத்தரவிட்டுள்ளது. அதிக விலை காரணமாக நாப்கின்களை வாங்க முடியாத கிராமப்புற பெண்கள், மாற்று நடைமுறைகளை பின்பற்றுவதாக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், பள்ளி மாணவியருக்கு நாப்கின் வழங்குவது போல் ரேஷன் கடைகளிலும் வழங்க உத்தரவிடுமாறு கோரப்பட்டு இருந்தது. அடுத்தக்கட்ட விசாரணை, டிச.16-ல் நடைபெறவுள்ளது.


