News December 6, 2025
அகண்டா 2 ரிலீஸ் ஆகாததற்கு இதுதான் காரணமா?

பாலையா ஃபேன்ஸ் ஆவலுடன் எதிர்பார்த்த அகண்டா 2 வெளியாகவில்லை. இப்படத்தை தயாரித்த 14 ரீல்ஸ் நிறுவனம், முந்தைய பட தயாரிப்புகள் காரணமாக ஈரோஸ் நிறுவனத்துக்கு ₹28 கோடி செலுத்த வேண்டும் என பேசப்படுகிறது. இதை கொடுக்காததால் படத்தை தடைசெய்யக்கோரி ஈரோஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. இப்பிரச்னையை தீர்த்து வருவதாக 14 ரீல்ஸ் கூறியதால், படம் டிச.20-க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 13, 2026
கட்டதுரை திருந்துவது மாதிரியே இல்லை: EPS

அதிமுக தொண்டன் கூட யாருக்கும் அடிமையில்லை என EPS கூறியுள்ளார். நாகையில் பேசிய EPS, தன்னை பற்றி என்னவெல்லாம் அவதூறு பேச முடியுமோ அந்த அளவிற்கு ஸ்டாலின் பேசுவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், ‘கட்டதுரை திருந்துவது மாதிரியே இல்லை’ என்ற வின்னர் பட வசனத்தை கூறி ஸ்டாலினை கிண்டலடித்தார். பாஜகவின் அடிமையாக அதிமுக மாறிவிட்டது, EPS ஒரு முரட்டு அடிமை என ஸ்டாலின், உதயநிதி பிரசாரம் செய்வது குறிப்பிடத்தக்கது.
News April 13, 2026
முதலிரவில் கணவன் அதிர்ச்சி.. மனைவி செய்ததை பாருங்க

ஆசை ஆசையாய் திருமணம் முடிந்து முதலிரவு அறைக்குள் நுழைந்த கணவன் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் உ.பி., ஆக்ராவில் நடந்துள்ளது. பணத்திற்காகவே உன்னை திருமணம் செய்தேன், உறவு கொள்ள விரும்பினால் எனக்கு ₹ 90 லட்சம் கொடு என புதுமணப்பெண் கூறியதே இதற்கு காரணம். இருவீட்டினர் சமாதானம் பேசியும் பலனில்லை. தற்போது, இந்த விவகாரம் போலீஸுக்கு சென்றுள்ளது. பிரச்னை முடிந்து புது மாப்பிள்ளைக்கு முதலிரவு எப்போது நடக்குமோ?
News April 13, 2026
பிஹாரின் அடுத்த முதல்வர் இவரா?

ராஜ்ய சபா MP-ஆக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார், இன்றோ அல்லது நாளையோ CM பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இந்நிலையில், புதிய CM-ஐ தேர்ந்தெடுக்கும் பணியில் BJP இறங்கியுள்ளது. DCM சாம்ராட் சவுத்ரி, உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய், மாநில அமைச்சர்கள் லக்கேந்திர பஸ்வான், ஸ்ரேயாசி சிங்கின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாம். அதன்படி, முதல் முறையாக பிஹாரின் CM ஆக பாஜகவை சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்கவுள்ளார்.


