News December 6, 2025
திருப்பரங்குன்றம் சர்ச்சை.. CM ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

மக்களின் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்துவதை தவிர்த்து, இந்துக்களின் உணர்ச்சிகளை புண்படுத்துவதில் CM ஸ்டாலின் கவனம் செலுத்துவதாக தமிழிசை சாடியுள்ளார்.<<18474670>> திருப்பரங்குன்றம் விஷயத்தில்<<>> பாஜகவை CM சூசகமாக சாடிய நிலையில், அதை தமிழிசை விமர்சித்துள்ளார். மாநகராட்சி ஊழலில் மேயர் ராஜினாமா, மாசடைந்த வைகை நீர் பற்றிய HC-ன் கருத்தை சுட்டிக்காட்டி, இதுதான் உங்கள் வளர்ச்சியா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News March 30, 2026
மதிமுக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

மதிமுகவின் தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கழக குமார் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் ராஜினாமா செய்துள்ளதாக கழக குமார் தெரிவித்துள்ளார். அவைத்தலைவர், பொருளாளர், துணை செயலாளர், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் இந்த முடிவால் மதிமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளதாம். <<-se>>#TNElection2026<<>>
News March 30, 2026
முதல் போட்டியிலேயே தடுமாறும் மஞ்சள் படை!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் CSK வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டி வருகின்றனர். உலகக் கோப்பை நாயகன் சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் ஆகியோர் தலா 6 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அதன்பிறகு களமிறங்கிய ஆயுஷ் மாத்ரே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால், 20 ரன்களுக்குள்ளாகவே 3 விக்கெட்களை இழந்து CSK தடுமாறி வருகிறது.
News March 30, 2026
தவெக கட்சியினர் பால்வாடிகள்: சேகர் பாபு

விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் தவெகவின் செயல்பாட்டை சேகர் பாபு கிண்டலடித்து பேசியுள்ளார். பிரசாரத்துக்கு எப்படி அனுமதி வாங்க வேண்டும் என்பது கூட தெரியாத பால்வாடிகள்(தவெகவினர்) என விமர்சித்த அவர், இவர்கள் எப்படி தேர்தலை சந்தித்து ஆட்சி அமைப்பார்கள் என சாடியுள்ளார். மேலும், மே 4-ம் தேதி அனைத்துக்கும் தீர்ப்பு கிடைத்துவிடும் என்றார்.


