News April 27, 2024
ட்ரோன்கள் பறக்க தடை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரக்கோணம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாலாஜா AAA கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மையத்திலிருந்து சுமார் 3கி மீ சுற்றளவு வரை ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் வாக்கு எண்ணும் நாட்கள் (04.06.2024) வரை பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 6, 2025
ராணிப்பேட்டையில் நாளையே கடைசி!

ராணிப்பேட்டை மக்களே, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு +2, ITI, டிகிரி போதும். +2 படித்தவர்களுக்கு ரூ.9,600, ITI-ரூ.11,040, டிகிரி-ரூ.12,300, டிப்ளமோ-ரூ.10,900 என உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு கல்வித் தகுதியின் மதிப்பெண் அடைப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. <
News November 6, 2025
அரக்கோணம்: GH-ல் திருட்டு!

அரக்கோணம் அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக இருப்பவர்களிடம் இரவு நேரங்களில் செல்போன் திருடு போனது .இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தொடர்ந்து புகார் சென்றது. இந்நிலையில் நேற்று இரவு நோயாளி ஒருவரிடம் செல்போன் திருடியவர் கையும் களவுமாக பிடிபட்டார். இன்று நவம்பர் 5ம் தேதி டவுன் போலீசார் விசாரித்து வழக்குப்பதிந்து ஆத்தூரை சேர்ந்த மாரியப்பன் (45) என்பவரை கைது செய்தனர்.
News November 6, 2025
அரக்கோணத்தில் ரயில் மோதில் பலி

ராணிப்பேட்டை, அரக்கோணம் அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றவர் ரயில் மோதி இறந்தார். இது குறித்து நவ.5 ம் தேதி அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.


