News December 6, 2025
மதவாதத்திற்கு அரசு இடம் கொடுக்காது: உதயநிதி

மதத்தை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களின் ஆசை தமிழக மண்ணில் பலிக்காது என்று DCM உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், இது திராவிட மண், தமிழ் மண் என்றும் மதவாதத்திற்கு திமுக அரசு இடம் கொடுக்காது எனவும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதை தமிழக மக்களும் விரும்ப மாட்டார்கள் என்று உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 10, 2025
மீண்டும் ரத்து செய்யப்படும் இண்டிகோ விமானங்கள்

இன்று, நாடு முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் பெங்களூருவில் இருந்து மட்டும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகியுள்ளது. கடுமையான நெருக்கடிக்குப் பிறகு, தங்களது விமான சேவைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக நேற்று, இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் அறிவித்திருந்தார். இந்த சூழலில், விமான சேவைகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
News December 10, 2025
இவர்களிடம் இருந்து கடனை திரும்பப் பெறுவது கடினமாம்..

கடன் கொடுப்பதை விட, அதை திரும்பப் பெறுவது தான் சிரமமாக உள்ளது என்பதே கடன் கொடுப்பவர்களின் புலம்பலாக உள்ளது. குறிப்பாக, ஜோதிடத்தின் படி மேஷம், மகரம், சிம்மம், மிதுனம், துலாம் ராசிக்காரர்களிடம் கொடுத்த கடனை திரும்பப் பெறுவது சிரமம் என நம்பப்படுகிறது. ஏனென்றால், சரியான திட்டமிடல் இல்லாததால், அவர்கள் அடிக்கடி பணப் பிரச்னையில் சிக்கிக் கொள்வார்களாம். உஷாரா இருங்க.
News December 10, 2025
டியூசன் டீச்சருக்கு நேர்ந்த அவலம்

சேலத்தில் டியூசன் டீச்சர் பாரதியின் மர்ம மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது ஆண் நண்பரான தனியார் ஹாஸ்பிடலின் CEO உதய்சரண், பாரதியின் முகத்தில் தலையணையை வைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண் பாரதி மறைந்த அதிமுக பிரமுகர் டெல்லி ஆறுமுகத்தின் மகள் ஆவார்.


