News December 6, 2025

சாலை விபத்துகளில் ஒரே ஆண்டில் 1.77 லட்சம் பேர் பலி

image

நாடு முழுவதும் 2024-ல் மட்டும் சாலை விபத்துகளால் 1.77 லட்சம் பேர் பலியாகி இருப்பதாக பார்லிமெண்டில் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சராசரியாக ஒவ்வொரு நாளும் 485 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகம். அதேநேரத்தில், சாலை போக்குவரத்து இறப்புகளின் எண்ணிக்கையை 2030-க்குள் பாதியாக குறைக்க இலக்கு நிர்ணயம் செய்திருப்பதாகவும் கட்கரி தெரிவித்துள்ளார். சாலை விதிகளை மதித்து, விலை மதிப்பற்ற உயிர்களை காப்போம்!

Similar News

News December 28, 2025

விஜயகாந்தின் உயர்ந்த உள்ளம்: CM ஸ்டாலின்

image

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை பற்றி CM ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். விஜயகாந்தை அருமை நண்பர் என குறிப்பிட்ட அவர், அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், விஜயகாந்தின் நினைவு நாளில் அவர் செய்த நற்பணிகளை நினைவுகூர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 28, 2025

‘போதும் வன்முறை’: கொதிக்கும் உலக தலைவர்கள்

image

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இன்று <<18681640>>டிரம்ப்பை<<>> சந்திக்க உள்ளார். இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் சுமார் 500 ட்ரோன்கள், 40 ஏவுகணைகளை கொண்டு தாக்கியதில் கீவ் நகரம் நிலைகுலைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ், கனடா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ரஷ்யா அமைதியை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

News December 28, 2025

புத்தாண்டு ராசிபலன் 2026: ரிஷபம்

image

லாப ஸ்தானத்தில் சனி, தன ஸ்தானத்தில் குரு உள்ள நிலையில் புத்தாண்டு பிறப்பதால், நீண்ட கால வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளில் இறங்குவீர்கள் *வாழ்க்கை துணையின் உடல், மனநலனில் அக்கறை கொள்ளுங்கள் *தேவையற்ற கடன்களை வாங்கி சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள் *உழைப்புக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும் *வெளிநாடு சென்று பயிலும் கனவு கைகூடும் *ஆரோக்கியத்தில் கவனம் தேவை *நீண்ட நாள் நினைத்த விருப்பங்கள் நிறைவேறும்.

error: Content is protected !!