News December 5, 2025
தலைவர்கள் பின்னால் இருக்கும் செடியின் சிறப்பு தெரியுமா?

PM மோடி – புடின் பேச்சுவார்த்தையின் போது, அவர்களுக்கு பின்னால் இருந்த செடி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. HELICONIA எனப்படும் இந்த செடி செழிப்பு, வளர்ச்சி, புது தொடக்கம், நல்லிணக்கத்தின் குறியீடாக உள்ளது. இதுபோன்ற முக்கிய தலைவர்களின் சந்திப்பின் போது, அங்கு எந்த ஒரு பொருளும் எதேச்சையாக இடம்பெறாது. எனவே ரஷ்யா – இந்தியா இடையிலான உறவு முன்னேற்றப் பாதையில் செல்வதை உலகிற்கு இது உணர்த்தியுள்ளது.
Similar News
News March 18, 2026
என் வீட்டின் மேல் ஏவுகணைகள் பறந்தன: சானியா மிர்சா

ரம்ஜான் பண்டிகைக்காக துபாயிலிருந்து தனது மகனுடன் ஹைதராபாத் திரும்பிய சானியா மிர்சா போர் சூழல் குறித்த தனது அனுபவங்களை அதிர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். தங்கள் வீட்டிற்கு மேல் ஏவுகணைகள் இடைமறிக்கப்படுவதை கண்டதாக அவர் கூறினார். அப்படிப்பட்ட சூழலை தங்கள் குழந்தைகள் அனுபவிப்பதை யாருமே விரும்பமாட்டார்கள்; அமைதியற்றதாக உணர்ந்ததால் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
News March 18, 2026
விமான இருக்கை: தனிக் கட்டணம் வசூலிக்க கட்டுப்பாடு

விமானங்களில் ஜன்னலோர இருக்கை, முன்பக்க இருக்கை என குறிப்பிட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், விமானங்களில் 60% இருக்கைகளை தேர்வு செய்ய தனிக் கட்டணம் வசூலிக்கக்கூடாது என விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ஒரே PNR எண்ணில் பதிவு செய்யும் பயணிகளுக்கு அடுத்தடுத்த இருக்கைகளை ஒதுக்கவும், விமான பயணம் தொடர்பான விவரங்களை பயணிகளின் தாய் மொழியில் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.
News March 18, 2026
FLASH: 6 கட்சிகளுக்கு 43 தொகுதிகளை கொடுத்த திமுக!

திமுக கூட்டணியில் 6 கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் – 28, <<19413588>>சிபிஐ – 5<<>>, மதிமுக – 4, ஐயுஎம்எல், கொமதேக, மமக-வுக்கு தலா 2 என மொத்தம் 43 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முக்கிய கட்சிகளான சிபிஎம், விசிக, தேமுதிகவுக்கு இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இத்தேர்தலில் குறைந்தபட்சம் 170 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளது.


