News December 5, 2025
விரைவில் திருமணம்? மறுக்காத ரஷ்மிகா

ரஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம் பற்றி தகவல்கள் தொடர்ந்து வெளி வருகின்றன. சமீபத்தில் ஹைதராபாத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், 2026 பிப்ரவரியில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேட்டி ஒன்றில் கேட்டபோது ரஷ்மிகா இதனை மறுக்கவில்லை. அதேநேரம், திருமணத்தை பற்றி பேச வேண்டியிருக்கும் போது நாங்கள் பேசுவோம் என பதிலளித்துள்ளார். விரைவில் டும் டும் டும்?
Similar News
News April 10, 2026
BREAKING: மளமளவென சரிந்தது.. மிகப்பெரிய தாக்கம்

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் தொடர்வதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது. அதன்படி, 17 காசுகள் சரிந்து ₹ 92.68-ஆக உள்ளது. பங்குச்சந்தை, ரூபாய் மதிப்பு நிலையற்ற தன்மையில் உள்ளதால் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்களுக்கு குழப்பம் உள்ளதாக கூறப்படுகிறது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தால் இறக்குமதிச் செலவு அதிகரித்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்படலாம்.
News April 10, 2026
கொசு பேட்டால் டிவிக்கு ஆபத்து

உங்கள் வீட்டில் கொசு பேட் இருக்கா? கொசு பேட்டில், கொசுவை கொல்ல ஏற்படும் தீப்பொறி, ஒரு மினி மின்காந்த துடிப்பை உருவாக்குகிறது. இது LED/OLED டிவிகளின் திரையில் உள்ள டிரான்சிஸ்டர்கள் & T-Con போர்டை சேதப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால், ஸ்கிரீனில் கருப்புக் கோடுகள்(அ)வட்டங்கள் ஏற்படலாம். சில நேரம் ஸ்கிரீன் முற்றிலும் கூட செயலிழக்கலாம். ஆகவே, டிவி அருகே கொசு பேட் பயன்படுத்துவதை தவிருங்கள். SHARE IT
News April 10, 2026
IPL டாஸ்: ராஜஸ்தான் அணி பவுலிங்

RCB -க்கு எதிரான ஆட்டத்தில் RR டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது. மழையின் காரணமாக டாஸ் ஒரு மணி நேரம் தள்ளிப்போன நிலையில், போட்டி 8.15 மணிக்கு தொடங்குகிறது. இதுவரை தோல்வியே சந்திக்காத அணிகளுக்கு இடையிலான மோதல் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.


