News December 5, 2025
வேலூர்: சாலையை கடக்க முயன்றவர் பைக் மோதி பலி!

காட்பாடி அரும்பருதி பகுதியை சேர்ந்தவர் நீலமேகன் (56), கூலித்தொழிலாளி. இவர் நேற்று (டிச.4) திருவலம்-காட்பாடி சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த பைக் நீலமேகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நீலமேகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பிரம்மபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
வேலூரில் சம்பளப் பிரச்னையா?

வேலூர் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <
News March 7, 2026
வேலூர்: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை eservices.tnpolice.<
News March 7, 2026
வேலூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

வேலூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க


