News December 5, 2025
அன்பே சிவம், அறிவே பலம்: கமல்ஹாசன்

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள MP கமல்ஹாசன்,
மதங்களின் அடிப்படை மனிதம் போற்றுவது தான் என்று கூறியுள்ளார். மேலும், பொது அமைதிக்கும், மத நல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த புதிய செயல்திட்டங்களுக்கும் நாம் பலியாகி விடக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘அன்பே சிவம், அறிவே பலம்’ என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 11, 2026
170 வேட்பாளர்களை அறிவித்தார் வேல்முருகன்

தவாக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் பட்டியலை வேல்முருகன் வெளியிட்டுள்ளார். 2 கட்டங்களாக வெளியிட்டுள்ள இப்பட்டியலில் 170 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டார் தொகுதிகளான கொளத்தூரில் ஊர்மிளா, எடப்பாடியில் கோவிந்தராஜ், திருச்சி கிழக்கில் ராயல் ராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இக்கூட்டணிக்கு கேமரா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
News April 11, 2026
விஜய்க்கு ஆதரவாக நானா? பார்த்திபன் மறுப்பு

விஜய் தான் அடுத்த CM என பார்த்திபன் கூறியதாக செய்தி பரவியது. இந்நிலையில், இதுபோன்ற கருத்தை தான் தெரிவிக்கவில்லை என அவர் மறுத்துள்ளார். மேலும், இந்த செய்தியை வெளியிட்ட நபரிடம், தான் பேசியதற்கான proof உங்களிடம் உள்ளதா என கேட்டேன். அந்த நபரிடம் proof இல்லததால், போஸ்ட்டை உடனே remove செய்துவிட்டார் எனக்கூறிய பார்த்திபன், இதுபோன்ற செய்தியை வெளியிடுவதற்கு முன் யோசித்து செயல்படவும் வலியுறுத்தினார்.
News April 11, 2026
விஜய் பரப்புரையில் விபத்துகள்: ஸ்டாலின் பதில்

புதிதாக எத்தனை பேர் வந்தாலும் திமுகவே வெல்லும் என ஸ்டாலின் கூறியுள்ளார். விஜய்யின் பரப்புரையின்போது ஏற்படும் விபத்துகள் குறித்து கேட்டதற்கு, நாட்டு மக்கள் அனைவரும் இதை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்; விரைவில் அவர்கள் திருந்துவார்கள் என்றார். மேலும், தற்போதைய சூழலில் 234 தொகுதிகளிலும் திமுகவே வெற்றிபெறும் என்ற நிலை உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.


