News December 5, 2025
BREAKING: அரசு வாபஸ் பெற்றது.. புதிய அறிவிப்பு

விமான நிறுவனங்களுக்கான புதிய விதிகளை DGCA வாபஸ் பெற்றுள்ளது. நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விமானி வாரத்திற்கு 2 நாள்கள் ஓய்வு பெறலாம், ஒரு இரவில் 2 விமானத்தை மட்டுமே விமானி தரையிறக்க வேண்டும் போன்ற விதிகளை DGCA அண்மையில் அமல்படுத்தியது. தற்போதைய புதிய அறிவிப்பால், விமான இயக்கத்தில் உள்ள பிரச்னைகள் தீரும் என கூறப்படுகிறது.
Similar News
News December 6, 2025
படத்திற்கு சான்றளிக்கும் குழுக்களில் 50% பெண்கள்!

பாலின சமத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில், சென்சார் போர்டில் தணிக்கை மற்றும் மறுஆய்வு குழுக்களில், 50% பெண்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) இதை உறுதி செய்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மாநிலங்களவையில் பதிலளித்த அவர், படங்களுக்கு சான்றளிக்கும் பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
News December 6, 2025
திமுகவுக்கு 90, தவெகவுக்கு 70.. உளவுத்துறை SURVEY

கரூர் துயருக்கு பிறகு, மத்திய உளவுத்துறை எடுத்த சர்வேயில், தவெகவுக்கு 70 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திமுக கூட்டணி 90, அதிமுக – பாஜக கூட்டணி 35, நாதக 1 இடங்களில் முன்னிலை வகிப்பதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள 38 தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக, வட, தென் மாவட்டங்களில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக சர்வே தெரிவிக்கிறதாம். உங்கள் கருத்து என்ன?
News December 6, 2025
TN அரசில் வேலை: 1,100 காலியிடங்கள், ₹56,100 சம்பளம்!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ➤காலியிடங்கள்: 1100 Assistant Surgeon (General) ➤வயது : 18 – 37 வரை ➤கல்வித்தகுதி: MBBS ➤தேர்ச்சி முறை: கணினி தேர்வு ➤சம்பளம்: ₹56,100 – ₹2,05,700 விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.11 ➤முழு விவரங்களுக்கு இங்கே <


