News April 27, 2024

தர்மபுரியின் எழில்மிகு ஒகேனக்கல் அருவி!

image

தர்மபுரி மத்தியிலிருந்து 47 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஒகேனக்கல் அருவி. இது ஒரு அருவியை மட்டும் குறிக்காது. பல அருவிகளைக் குறிக்கும் ‘உகுநீர்க்கல்’ என்ற தமிழ் சொல்லே ஒகேனக்கல் என்றானது. இதன் கன்னட அர்த்தம் ‘புகையும் கல்பாறை’ ஆகும். பழங்காலத்தில் இதனைச் சுற்றியுள்ள பகுதியை தலைநீர் நாடு என்றழைத்தனர். கர்நாடகாவின் எல்லையில் இருப்பதால் கன்னட மொழி இந்த பகுதிகளில் ஆரம்பகாலத்திலிருந்து இங்கு பரவியுள்ளது.

Similar News

News August 23, 2025

நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டுகோள்

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ், ஒகேனக்கல் நீர்ப்பிடிப்புப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை செப்டம்பர் 10-ம் தேதிக்குள் தாமாக முன்வந்து வனத்துறை அல்லது காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சட்டவிரோத செயல்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவறுவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News August 22, 2025

தருமபுரியில் இளைஞர்களுக்கு இலவச சுயதொழில் பயிற்சி

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இளைஞர்களுக்கு இலவச சுயதொழில் பயிற்சி அளிக்கிறது. 18 முதல் 45 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் செப்டம்பர் 8. மேலும் தகவல்களுக்கு, இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம்.

News August 22, 2025

இலவச சட்ட ஆலோசனை மையத்தின் சேவைகள் (2/2)

image

▶️ சொத்து தகராறு
▶️ குடும்ப பிரச்சனை
▶️ கடன் பிரச்சனை
▶️ குழந்தைகள் & பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
போன்றவைகளுக்கு ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர் பெறலாம் . நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அடாலட் மூலம் தீர்வு காணலாம். வக்கீல் பீஸ் இல்லாமலே வாதாட முடியும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!