News April 27, 2024
1.25 கோடி ரூபாய்க்கு பருத்தி ஏலம்

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் இன்று நடைபெற்றது. ஏலத்தில் மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 492 பேர் கலந்து கொண்டு பருத்தி விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பருத்தி அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு 8,366 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இதன் மதிப்பு சுமார் 1.25 கோடி ஆகும்.
Similar News
News November 4, 2025
திருப்பூர்: தாசில்தார், VAO லஞ்சம் கேட்டால்

திருப்பூர் மக்களே, பட்டா மாற்றம், சிட்டா, சாதி சான்றிதழ், இருப்பீட மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு சாம் கண்டிப்பாக ஒருமுறையாவது விஏஓ, தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டியது இருக்கும். அப்போது அங்கு அதிகாரிகள் முறையாக பணி செய்யாமல் லஞ்சம் கேட்டால் (0421-2482816) என்ற எண்ணில் புகார் அளிக்கவும். (SHARE பண்ணுங்க)
News November 4, 2025
பல்லடம் அருகே தீ பற்றி எரிந்த பேருந்து

பல்லடம் அருகே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெரும்பாளி பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்புறம் தீ பற்றி எறிய தொடங்கியது. தொடர்ந்து உள்ளே இருந்த 15 பயணிகள் பத்திரமாக எந்த சேதமும் இன்றி உயிர்தப்பினர். இத்தீவிபத்தில் பேருந்து முற்றிலுமாக தீயில் எரிந்து சேதமானது
News November 4, 2025
தாராபுரம் அருகே சோகம்!

தாராபுரம் அருகே உள்ள குளத்துப்பாளையம் அருகே உள்ள நல்லி கவுண்டன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் குளத்துப்பாளையம் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியில் உள்ளார். இவர் பணி காரணமாக இருந்தபோது திடீரென உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்த அவரது தாய் எதிர்பாராதமாக நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


