News April 27, 2024
தலைகீழாக நின்ற சிலம்பாட்ட கலைஞர்கள்
செங்கம் அடுத்த பழைய குயிலம் கிராமத்தில் மாரியம்மன் ஆலயத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் நேற்று பெண்கள் வேப்பிலை தோரணம் கட்டி வீதியில் தோறும் உலா சென்று கூல் ஊற்றி அம்மனை வழிபட்டனர். ராஜபாளையம் காமாட்சி அம்மன் ஆலயம் அருகே சிலம்பாட்ட கலைஞர்கள் மனித உடல் மீது தலைகீழாக நின்று தங்களுடைய தனி திறமையை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்தனர்.
Similar News
News November 20, 2024
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (20.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 20, 2024
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
வரும் நவம்பர் 22ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. இந்த வாய்ப்பை படித்த இளைஞர்கள் பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெறுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
100 நாள் பணியாளர்களின் வருகை பதிவேடு ஆய்வு
வந்தவாசி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வந்தவாசி அருகே உள்ள மும்முனி ஊராட்சியில் நடைபெறும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் செய்யும் பணியையும், அங்கு 100 நாள் பணியாளர்கள் வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்தார். மேலும் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.