News December 5, 2025
விமானப்படையில் வேலை, டிகிரி போதும்: APPLY NOW

விமானப்படையில் Flying and Ground Duty பணிகளில் 340 காலிப்பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 20 – 26 வயது வரை. தகுதி: திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப பிரிவில் தரைத்தளப் பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வு: உடற்தகுதி, உளவியல் சோதனை, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.14. விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News December 5, 2025
விஜய் கட்சியில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளார். அண்மைக் காலமாக திமுக மீது அதிருப்தியில் இருந்த அவர், தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளார். செங்கோட்டையனைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத்தும் தவெகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பலமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மதிமுக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் நாஞ்சில் சம்பத் பயணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News December 5, 2025
2026 தேர்தல்: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு

2026 சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்சியாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நாதக அறிவித்துள்ளது. கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரான இடும்பாவனம் கார்த்திக், வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட உள்ளார். மேட்டூரில் வீரப்பனின் மகள் வித்யாராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீமான் போட்டியிடும் தொகுதி குறித்த விவரம் வெளியாகவில்லை. பிப்ரவரியில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
News December 5, 2025
டியூட் பாடல்களுக்கு ₹50 லட்சம் பெற்ற இளையராஜா

‘டியூட்’ படத்தில் இடம்பெற்ற தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த தடை கோரி <<18463776>>இளையராஜா<<>> வழக்கு தொடர்ந்தார். இதில் இருதரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து, இளையராஜாவுக்கு உரிய இழப்பீடும், படத்தில் கிரெடிட்டும் வழங்கப்படும் என இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், ₹50 லட்சத்தை இளையராஜா இழப்பீடாக பெற்றுள்ளார். இதனையடுத்து, அவர் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளார்.


