News April 27, 2024

ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமின் மறுப்பு

image

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமின் வழங்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் மறுத்து விட்டது. நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது மாமா இறந்து விட்டதால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள 13 நாள் ஜாமின்கோரி, நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் அளிக்க மறுத்து விட்டது.

Similar News

News February 3, 2026

நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. Meta-வை கண்டித்த SC!

image

WhatsApp-ன் தாய் நிறுவனமான Meta-வை SC கடுமையாக விமர்சித்துள்ளது. WhatsApp-ன் Privacy Policy விசாரணையின் போது, இந்திய சட்டங்களை பின்பற்றவில்லை எனில், நாட்டில் இருந்து வெளியேறும் படியும் கடிந்து கொண்ட CJI சூர்யகாந்த் சர்மா, குடிமக்களின் Privacy-ல் ​விளையாட முடியாது எனவும் எச்சரித்துள்ளார். நாட்டு மக்களின் தரவுகளில் ஒரு எழுத்தை கூட பகிர்ந்து கொள்ள அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

News February 3, 2026

அண்ணாமலை விலகல்.. நயினார் விளக்கம்

image

நயினார் மீதான <<19039038>>அதிருப்தியால் <<>>அண்ணாமலை பதவி விலகியதாக செய்திகள் வெளியாகின. தேர்தல் வரவிருக்கும் நிலையில், அவரின் விலகல் அரசியல் ரீதியாக பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து பேசிய நயினார், தந்தை உடல்நிலை காரணம் என அண்ணாமலையே சொல்லிவிட்டபின், ஏன் இப்படி பொய்யான தகவல் வெளியானது என்று எனக்கு தெரியவில்லை. பாஜகவை பொருத்தவரை தனிப்பட்டு எந்த முடிவும் எடுக்க முடியாது என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

News February 3, 2026

இன்னும் 5 வருடத்தில் இவை இல்லாமல் போகலாம்!

image

டெக்னாலஜி என்றும் வளர்ச்சியடைய கூடியதே. ஒரு காலத்தில் அனைவரது வீட்டிலும் இருந்த ரேடியோ இன்று அட்ரஸே இல்லாமல் ஆகிவிட்டது. அப்படித்தான் தற்போது நாம் யூஸ் பண்ணும் பல விஷயங்களும், டெக்னாலஜியின் வளர்ச்சியால் இன்னும் 5 ஆண்டுகளில் வழக்கொழிந்து போகலாம். அவற்றில் சிலவற்றை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். வலதுபக்கம் Swipe செய்து பார்க்கவும். காலப்போக்கில் இன்னும் எவையெல்லாம் மறையும் என நினைக்கிறீங்க?

error: Content is protected !!