News December 5, 2025
புதிய தொழிலாளர் சட்டம்.. எப்போது அமல் தெரியுமா?

அடுத்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. இதற்காக 4 தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகளை இறுதி செய்யும் செயல்முறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. புதிய தொழிலாளர் சட்டமானது தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்பு, சிறந்த சலுகைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என மத்திய அரசு கூறுகிறது. ‘சம வேலைக்கு சம’ ஊதியம் என்ற விதியால் ஆண்களும், பெண்களும் ஒரே ஊதியம் பெறுவார்கள்.
Similar News
News December 5, 2025
மதமோதலை ஏற்படுத்த TN அரசு முயற்சி: அண்ணாமலை

சிக்கந்தர் மசூதியை தவிர, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தமானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டிய அவர், தீபத்தூண் கோயிலுக்கு சொந்தமானது என்பது தீர்ப்புகளில் உறுதியாக உள்ளதாக கூறினார். இந்த விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி பொய்களை கூறி வருவதாக விமர்சித்த அவர், மதமோதலை ஏற்படுத்த தமிழக அரசு தான் முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
News December 5, 2025
மழைக்காலத்தில் மட்டுமே பாக்.,-க்கு நீர்: மத்திய அரசு

இந்தியாவின் சட்லஜ், பியாஸ் நதிகளில் இருந்து, பருவமழை காலத்தை தவிர வேறு எந்த காலத்திலும் PAK-க்கு தண்ணீர் திறந்துவிடப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய இணையமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, இந்த ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணைகளின் பாதுகாப்பிற்காக மட்டுமே நீர் வெளியேற்றப்படுவதாக குறிப்பிட்டார்.
News December 5, 2025
அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

NDA-வின் CM வேட்பாளராக EPS இருக்கும்வரை அமமுக, அந்தக் கூட்டணியில் இணையாது என TTV தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு பேசிய அவர், அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றார். மேலும், வரும் தேர்தலில் துரோகம்(EPS) வீழ்த்தப்பட்டு அதிமுக மீண்டும் ஒன்றிணைக்கப்படும் என்பதை இன்றைய தினம் உறுதிமொழியாக எடுத்துள்ளதாகவும் கூறினார். உங்கள் கருத்து?


