News April 27, 2024

அழகிப் பட்டம் வென்ற 60 வயது பெண்

image

அர்ஜெண்டினா நாட்டின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற அழகிப் போட்டியில், 60 வயது பெண் ஒருவர் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லா பிளாட்டா நகரை சேர்ந்த அலெஜான்ட்ரா மரிசா ரொட்ரிக்ஸ், 60 வயதிலும் அச்சு அசலாக இளம்பெண் தோற்றத்துடன் அழகாக காணப்படுகிறார். இதனால், அவர் பியூனஸ் அயர்ஸ் மாகாண அழகிப் போட்டியில் கலந்து கொள்ளவே, சிறந்த அழகியாக தேர்வாகி க்ரீடம் சூட்டப்பட்டார்.

Similar News

News February 14, 2026

தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

image

2026-ல் புதிய விதிகளின்படி, நகைகளை தாமதமாக விற்றால் உங்களின் வரிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, வாங்கிய தங்கத்தை 2 ஆண்டுகளுக்கு பின் விற்பனை செய்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்பட்டு 12.5% வரி விதிக்கப்படும். முன்பிருந்த இண்டெக்சேஷன் பலன் இப்போது கிடையாது. அதேநேரத்தில், 2 ஆண்டுகளுக்குள் தங்கத்தை விற்றால் குறுகிய கால முதலீடாக கருதி, வருமான வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படும்.

News February 14, 2026

கார்களின் விலை ₹55,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

கார் வாங்கப் போறீங்களா? இந்த பிப்ரவரி மாதத்தில், மாருதி தனது Ignis, Baleno, Fronx, Grand Vitara, Jimny போன்ற மாடல்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ₹1,75,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு சலுகை என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News February 14, 2026

சூரஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம்.. தவெக உறுதி

image

சேலம் கூட்டத்தில் உயிரிழந்த சூரஜின் குடும்பத்திற்கு உதவுவோம் என அம்மாவட்ட தவெக தலைமை உறுதியளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரஜின் குடும்பத்திற்கு ₹5 லட்சம் தருவதாகவும், அவருடைய குழந்தைகளின் முழு படிப்பு செலவை ஏற்பதாகவும் சேலம் மாவட்ட தவெக தெரிவித்துள்ளது. முன்னதாக, விஜய் தங்களுக்கு உதவுவதாக வாக்குறுதி அளிக்காத வரை உடலை வாங்கமாட்டோம் என சூரஜின் குடும்பம் போராடியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!