News April 27, 2024
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்.
Similar News
News March 8, 2026
விழுப்புரத்தில் தட்டித் தூக்கிய திமுக!

மயிலம் சட்டமன்ற தொகுதி, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் அதிமுக விளங்கம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் SST. சங்கர் மற்றும் OPS அணியினர் உட்பட 500க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
News March 8, 2026
செஞ்சி அருகே துணிகரக் கொள்ளை!

விழுப்புரம்: செஞ்சியை அடுத்த பெரும்புகையைச் சேர்ந்தவர் முருகன்(55). இவர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றுகிறார். நேற்று முன் தினம் மனைவி ராஜேஸ்வரியுடன் வங்கிக்குச் சென்றார். திரும்பி வந்த போது, சில மர்ம நபர்கள் வீட்டிலிருந்து 20 பவுன் நகைகள், 210 கிராம் வெள்ளி, ரூ.60 ஆயிரம் கொள்ளை அடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News March 8, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று மார்ச் (07) இரவு 10 மணி முதல் இன்று மார்ச்- (08) காலை 6 மணி வரைரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


