News December 4, 2025

திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம் ஏற்றப்படுமா?

image

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்று இரவு 10:30-க்குள் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் 2-வது முறையாக போலீசார் தீபம் ஏற்ற மனுதாரருக்கு அனுமதி அளிக்கவில்லை. அரசு தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். மலைக்கு செல்ல முயன்ற பாஜக, இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பதற்றம் நீடிக்கிறது.

Similar News

News December 5, 2025

திருப்பத்தூர்: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கு<<>> க்ளிக் செய்து (டிச.8)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News December 5, 2025

2026-ல் 13 மாதங்களா?

image

இந்து மதத்தில் சூரியன்(365 நாள்கள்), சந்திரன்(354 நாள்கள்) என 2 நாள்காட்டிகள் உள்ளன. இவ்விரண்டிற்கும் 11 நாள்கள் வித்தியாசம் உள்ளதால், 3 ஆண்டுக்கு ஒருமுறை (32 மாதங்கள் & 16 நாள்கள்) ஒரு மாதம் கூடுதலாக வரும். இதை ஆதிக் மாதம் என்பார்கள். 2026 மே 17 முதல் ஜூன் 15 வரை இம்மாதம் வருகிறது. இந்த மாதத்தில் சுபகாரியங்கள் தவிர்க்கப்படும். இருப்பினும், இதனால் ஆங்கில நாள்காட்டியில் எந்த மாற்றமும் இருக்காது.

News December 5, 2025

கடைசி வரை நிறைவேறாமல் போன ஜெயலலிதாவின் ஆசை

image

அரசியலில் ஆண்களுக்கே சிம்மசொப்பனமாய் திகழ்ந்த Ex CM ஜெ.,வுக்கு அரசியலை விட்டு விலகும் எண்ணம் இருந்தது என்றால் நம்பமுடிகிறதா? ஆம், அரசியல் ரேஸிலிருந்து விலகி, புக்ஸ், மியூசிக், செல்லப்பிராணியுடன் தோட்டத்தில் நேரத்தை செலவிட ஆசைப்படுவதாக 1999-ல் இண்டர்வியூ ஒன்றில் அவர் கூறியிருக்கிறார். யாரையும் சந்திக்காமல், எதுவும் பேசாமல் அமைதியான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற அவருடைய ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை.

error: Content is protected !!