News December 4, 2025

மோடி அரசே ரூபாய் மதிப்பு குறைவுக்கு காரணம்: கார்கே

image

மத்திய அரசின் கொள்கைகளே ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் என மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மோடி அரசின் திட்டங்கள் சரியானதாக இருந்தால் ரூபாயின் மதிப்பு சரிந்திருக்காது எனவும் அவர் சாடியுள்ளார். 2014-ல் குஜராத் CM-ஆக இருந்த மோடி, ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு காங்கிரஸை குற்றம்சாட்டியதை சுட்டிக்காட்டி, இப்போது நீங்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என PM-யிடம் கார்கே கேட்டுள்ளார்.

Similar News

News December 5, 2025

ஜெ. ஜெயலலிதா என்னும் ஆளுமை..!!

image

அம்மா என அதிமுகவினரால் அழைக்கப்படும் ஜெயலலிதா மறைந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும், தன்னுடைய மக்கள் பணிகளின் மூலம் அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மாணாக்கருக்கு இலவச லேப்டாப், அம்மா உணவகம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, தாலிக்கு தங்கம், அனைத்து மகளிர் காவல் நிலையம் என அவர் செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம். அவரின் நலதிட்டங்களை நினைவுக்கூர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News December 5, 2025

FLASH: முதலிடம் பிடித்து அசத்திய பிரக்ஞானந்தா!

image

லண்டனில் நடக்கும் கிளாசிக் செஸ் தொடரில் முதலிடத்தை பிடித்துள்ளார் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா. மொத்தம் 119 பேர் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா உள்பட பிரனவ் ஆனந்த், இனியன் விளையாடினர். இந்நிலையில், 9 சுற்றுகள் முடிவில் செர்பியாவின் வெலிமிக் ஐவிக், இங்கிலாந்தின் அமீத் காசி, பிரக்ஞானந்தா தலா 7 புள்ளிகளை கொண்டிருந்ததால் மூவரும் முதலிடத்தை பகிர்ந்துகொண்டனர்.

News December 5, 2025

டாப் 10 கவர்ச்சிகரமான உச்சரிப்பை கொண்ட நாடுகள்

image

World of Statistics-ன் புதிய தரவரிசை, 2025-ம் ஆண்டில் உலகின் டாப் 10 கவர்ச்சிகரமான உச்சரிப்புகள் பெயரிடப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நாடுகளின் உச்சரிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாட்டு மக்கள் பேசுவது பிறரை ரசிக்க வைக்குமாம். அவை எந்தெந்த நாடுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!