News December 4, 2025

கிருஷ்ணகிரி: குடும்ப தகராறில் பெண் தற்கொலை!

image

கிருஷ்ணகிரி, கெலமங்கலம் அருகே வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார்.இவரது மனைவி காயத்ரி(25). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆனா நிலையில், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். யோதனால் விரக்தியடைந்த காயத்ரி, 6 மாதங்களுக்கு முன் தன் தாய் வீட்டிற்கு சென்றார். பின் அவர், நேற்று முன்தினம் வீட்டிலுள்ள 8 அடி தண்ணீர் தொட்டியில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். இதனை, அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 6, 2025

கிருஷ்ணகிரி: யானை முகம் கொண்ட அதிசய சிவன்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகம் கிராமத்தில் உள்ளது ஐராவத ஈசுவரர் கோயில். முன், பின் என இரட்டை கருவறைகள் கொண்ட இந்த கோயிலின் பின்புறம் உள்ள கருவறையில் உள்ள லிங்கத்தில் யானையின் முகம் உள்ளது.ஹஸ்தி என்ற யானை வந்து வழிபட்டதால் லிங்கம் யானை முகம் பெற்றது. அதனால் இந்த ஊர் முதலில் ஹஸ்திமுகம் என பெயர் பெற்று இன்று அத்திமுகம் என மாறியுள்ளது. தகவல் பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க..

News December 6, 2025

கிருஷ்ணகிரி பெண்களே.. சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு

image

ஹோட்டல் அல்லது கேட்டரிங் தொழிலை தொடங்க நினைக்கும் பெண்களுக்காக, மத்திய அரசு ‘பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 2 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000 வந்துவிடும். இதனை 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்தினால் போதும். உடனே ஷேர் பண்ணுங்க!

News December 6, 2025

கிருஷ்ணகிரி: Whats App மூலம் ஆதார் அட்டை

image

கிருஷ்ணகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை+9013151515 சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக “HAI” என SMS அனுப்பினால் போதும். அதுவே ஆதார் அட்டையை பெற வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!