News April 27, 2024
கோலியின் திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது

ஐபிஎல் தொடரை அடிப்படையாக வைத்து விராட் கோலியின் திறனை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கோலியை தேர்வு செய்யக்கூடாதென சில முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஸ்ரீகாந்த், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் சர்வதேச தரத்திற்கு நிகரான திறமைகளை பார்க்க வேண்டும் எனக் கூறினார்.
Similar News
News February 1, 2026
CUET-UG தேர்வுக்கான அவகாசம் நீட்டிப்பு

மத்திய பல்கலைக்கழகங்களில் 2026-27 கல்வியாண்டு இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான CUET UG தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.30-ல் அவகாசம் முடிந்த நிலையில், தேசிய தேர்வு முகமை அதை தற்போது பிப்.4 வரை நீட்டித்துள்ளது. விண்ணப்ப கட்டணத்தை செலுத்த பிப்.7 கடைசி நாள் என்றும், திருத்தங்கள் மேற்கொள்ள பிப்.9 முதல் 11 வரை வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
News February 1, 2026
அரசு ஊழியர்களை ஏமாற்றிய திமுக அரசு: அன்புமணி

TAPS திட்டத்தை செயல்படுத்த ₹13,000 கோடி நிதி திமுக அரசிடம் இல்லை என அன்புமணி தெரிவித்துள்ளார். தனது X பதிவில், ஜனவரியில் ஓய்வுபெற்ற 5,000 அரசு ஊழியர்களில், ஓய்வூதியம் பெறத் தகுதியானவர்களுக்கு அதற்கான ஆணை வழங்கப்படவில்லை என சாடியுள்ளார். இதுபற்றிய அரசாணையில், விதிமுறைகளை வகுத்த பிறகே தமிழகத்தில் TAPS திட்டம் நடைமுறைக்கு வரும் என்பதை திமுக அரசு திட்டமிட்டு மறைத்து ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
News February 1, 2026
Sports 360°: கூடைப்பந்தில் தமிழகம் சாம்பியன்

*ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20-ல் பாகிஸ்தான் 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி *ஆஸி., ஓபன் டென்னிஸ் ஃபைனலில், அல்காரஸ் – ஜோகோவிச் இன்று மோதல் *தாய்லாந்து மாஸ்டர்ஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு தேவிகா முன்னேற்றம் *தேசிய கூடைப்பந்து 3*3 சாம்பியன்ஷிப்பில் தமிழகம் 21-20 என்ற புள்ளிகள் கணக்கில் UP-ஐ வீழ்த்தியது *SAFF U-19 மகளிர் கால்பந்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் நேபாளை வீழ்த்தியது


