News December 4, 2025

காஞ்சிபுரத்தில் ரூ.9.31 லட்சம் அபராதம்

image

காஞ்சிபுரத்தில் கடந்த நவம்பர் மாத வாகன தணிக்கையில், விதிமீறிய 121 வாகனங்களுக்கு மொத்தம் ரூ.9,31,690 அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் பகுதிகளில் நடத்திய சோதனையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News

News December 5, 2025

காஞ்சி மக்களே மின்தடையா? உடனே கால் பண்ணுங்க!

image

காஞ்சிபுரத்தில் மழை பெய்து வருவதால், அடிக்கடி மின்வெட்டு ஏற்படலாம். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்பு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9444371912 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ X பக்கத்திலும் புகார்களை கொடுக்கலாம். ஷேர் பண்ணுங்க

News December 5, 2025

காஞ்சி: கடன் தொல்லை நீங்கி, செல்வம் செழிக்க!

image

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அமைந்துள்ள திருஊரகப்பெருமாள் திருக்கோயில், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் திருஊரகப்பெருமாளை சனிக்கிழமைகளில் மனமுருகி வழிபட்டால், கடன் தொல்லை நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பணக்கஷ்டத்திலும், கடனிலும் வாடும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News December 5, 2025

காஞ்சிபுரம் இரவு நேர ரோந்து போலிசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

error: Content is protected !!