News December 4, 2025

கோவை: டிகிரி போதும் வானிலை ஆய்வு மையத்தில் வேலை!

image

கோவை மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் (IMD) காலியாகவுள்ள Admin. Assistant பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.29.200 வழங்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

Similar News

News December 4, 2025

கோவையில் நிலத்தின் மதிப்பு கிடு கிடு உயர்வு

image

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் மாநகரமாக கோவை உள்ளது. இங்கு ஐ.டி. தொழில் மையங்கள், மோட்டார் பம்பு தொழிற்சாலைகள், பவுண்டரிகள், மின்னணு வாகன தொழிற்சாலைகள் அதிக அளவில் கொட்டி கிடக்கின்றன. மேலும், தொழிற்சாலைகள் தேவை அதிகரிப்பால் கட்டிடங்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் கோவையில் ரேஸ்கோர்ஸ், சூலூர், பீளமேடு, அவினாசி ரோடு பகுதியில் நில மதிப்பு உயர்ந்து வருகிறது.

News December 4, 2025

BREAKING: கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

image

கோவை மாநகரின் மையத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இதன் அருகிலேயே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பிரதான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு 11-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலமாக வந்துள்ளது. இதன்பேரில் வெடிகுண்டு நிபுணர்களுடன், போலீசாரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 4, 2025

கோவை: ஐடி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

image

கோவை குனியமுத்தூர் பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் காவிய பிரியா(25). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காவிய பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விரைந்து சென்ற போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் காதலித்த இளைஞரை திருமணம் செய்ய இருந்த நிலையில், தற்கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!