News April 27, 2024
கள்ளக்குறிச்சி அருகே 13 பேர் சிக்கினர்

கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று ஒரே நாளில் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பாக கள்ளக்குறிச்சி,தியாகதுருகம், வரஞ்சரம், கீழ்குப்பம், கச்சிராயபாளையம் ஆகிய காவல் நிலையங்களில் தலா இரண்டு நபர்கள் மீதும், சின்னசேலம் காவல் நிலையத்தில் மூன்று நபர்கள் மீதும் என மொத்தம் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 23, 2025
கள்ளக்குறிச்சி: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது. சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு, முழு உடல் பரிசோதனை உள்ளிட்டவற்றை செய்து, உடல் ஆரோக்கியம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 23, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 22) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
News August 22, 2025
கள்ளக்குறிச்சி: வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

கள்ளக்குறிச்சி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க