News December 4, 2025

தட்கல் டிக்கெட் எடுக்க.. இனி OTP கட்டாயம்

image

ரயில் நிலையங்களில் நேரடியாக தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு OTP கட்டாயமாக்கப்படவுள்ளது. தட்கல் புக்கிங்கில் மோசடியை தவிர்க்க பயணியின் மொபைலுக்கு OTP அனுப்பும் முறை, சோதனை முயற்சியாக வட மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது. தங்களது மொபைலுக்கு வரும் OTP-ஐ பயணிகள், டிக்கெட் கவுன்டர் அலுவலரிடம் கூறினால் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

Similar News

News December 4, 2025

டெங்கு அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

image

டெங்கு காய்ச்சல் என்பதற்கான சில அறிகுறிகள் உள்ளன. இவற்றை தெரிந்துகொள்வதால் நாம் எச்சரிக்கையாக இருக்க முடியும். அறிகுறிகள்: திடீரென அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி, பசியின்மை, மிகுந்த சோர்வு ஆகியவை. இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். சாதாரண காய்ச்சல் என்று இருந்துவிட வேண்டாம். SHARE பண்ணுங்க.

News December 4, 2025

குழந்தைகளுக்கு எப்போது பசும்பால் கொடுக்கலாம்?

image

தாய்மார்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக்கூடாது என டாக்டர்கள் சொல்கின்றனர். ஏனென்றால் பசும்பாலில் புரோட்டீன் அதிகமாக இருப்பதால் அவர்களால் அதை எளிதில் செரிக்க முடியாது. அரிதான நேரங்களில் சில குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு கூட ஏற்படலாம். குழந்தைகளை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

News December 4, 2025

தேவை இல்லாத பதற்றத்தை உண்டாக்க முயற்சி: EPS

image

திருப்பரங்குன்றத்தில் கடந்த 2 நாள்களாக தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க, திமுக கபட நாடகம் ஆடுவதாக EPS கண்டனம் தெரிவித்துள்ளார். தீபம் ஏற்றக் கூறி மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்தும், அதை செயல்படுத்த தவறியதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், ‘எம்மதமும் சம்மதம்’ என இல்லாமல், தேவையற்ற பிரச்சனைக்கு வழிவகுத்த ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!