News December 4, 2025
தர்மபுரி காவல்துறை இரவு ரோந்து விபரம் வெளியீடு!

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (டிசம்பர்-3) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!
Similar News
News December 4, 2025
தருமபுரியில் 8 பவுன் நகையை மீட்ட காவலர்!

சேலத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி நாகர்கோவிலில் இருந்து சேலம் – மும்பை ரயிலில் சேலத்துக்கு வந்தார், செவ்வாய்க்கிழமை சேலம் வந்ததும் தமிழ்ச்செல்வி ரயிலைவிட்டு இறங்கியுள்ளார். அப்போது ரயிலில் 8 பவுன் நகை & 3000 பணப்பையை ரயிலில் தவற விட்டுள்ளார். பின், சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில், தருமபுரி உதவி ஆய்வாளர் ரமேஷ், நகை & பணத்தை மீட்டு நேற்று (டிச.3) தமிழ்செல்வியிடம் ஒப்படைத்தார்.
News December 4, 2025
தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 4, 2025
தருமபுரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


