News April 27, 2024
படித்தவர்களுக்கு ஜனநாயகக் கடமை மீது நம்பிக்கை இல்லை?

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை போல், கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. பெங்களூரு மத்திய தொகுதி – 52.8%, வடக்கு தொகுதி – 54.4%, தெற்கு தொகுதி -53.1% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. ஏழை, எளிய மக்கள் வாழும் கிராமங்களில் பதிவாகும் வாக்குகளை விட, படித்த நபர்கள் அதிகம் வாழும் நகரங்களில் வாக்குப்பதிவு சரிந்தது, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
Similar News
News August 24, 2025
நாளை மிக கவனம்

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை(ஆக.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என IMD கணித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஆக. 30-ம் தேதி வரை மழை நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையிலும் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், நாளை வேலை, கல்வி நிலையங்களுக்கு செல்பவர்கள் கவனமுடன் இருங்கள் நண்பர்களே..!
News August 24, 2025
கிட்னி திருட்டு திமுகவுக்கு தண்டனை உறுதி: EPS சூளுரை

திமுகவினர் நடத்தும் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்ற மக்கள் தங்களது உடலுறுப்புகள் உள்ளதா என்பதை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என EPS கூறியுள்ளார். மண்ணச்சநல்லூர் பரப்புரையில் பேசிய அவர், ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க மக்களின் கிட்னியை கழற்ற வேண்டும் என திமுக MLA நக்கலாக பேசியது கேவலமானது என்றார். விசாரணையில் கிட்னி திருட்டு நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோர்ட்டில் அவர்களுக்கு தண்டனை உறுதி என்றார்.
News August 24, 2025
Beauty Tips: முகம் Dull-ஆவே இருக்கா? ஒரு பொருள் போதும்

என்ன செய்தாலும் முகம் Dull-ஆகவே இருக்கிறதா? முகத்தைப் பொலிவாக வைக்க பச்சைப் பால் போதும். இதற்கு, முதலில் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு, இரண்டு டீஸ்பூன் பச்சைப் பாலில், சிறிது தேன் கலந்து நன்றாகக் கலக்கி, அதை முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து, தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதை, தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவுடன் இருக்கும். SHARE.