News April 27, 2024
ராகுல் காந்தி தொகுதியில் 72.62% வாக்குப்பதிவு

ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் தேர்தலில் 72.62% வாக்குகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 67.48% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2019 தேர்தலை (77.84%) விட குறைவாகும். அதிகபட்சமாக கண்ணூரில் 70.76% வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், சசிதரூர் போட்டியிட்ட திருவனந்தபுரத்தில் 64.14% வாக்குகள் பதிவாகியுள்ளது.
Similar News
News November 14, 2025
100 இடங்களை தாண்டியது NDA

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் NDA கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி BJP 56, JDU 44, LJP (RV) 3 என மொத்தம் 103 இடங்களில் NDA முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல், 60 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்த INDIA கூட்டணி, தற்போது 55 இடங்களாக குறைந்து பின்னடைவை சந்தித்துள்ளது. RJD 38, CONG 12, CPI (ML) 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
News November 14, 2025
குழந்தைகளை பகுத்தறிவோடு வளர்ப்பேன்: CM ஸ்டாலின்

தாயன்பு காட்டி குழந்தைகளின் கனவுகளுக்கு துணை நிற்கும் திராவிடமாடல் அரசின் சார்பில் குழந்தைகள் தின வாழ்த்துகள் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். குழந்தைகளின் ஒவ்வொரு அடியிலும் அவர்களுடன் நிற்பேன் எனவும் அவர்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பரந்த பார்வையும் பகுத்தறிவும் கொண்ட குடிமக்களாய் அவர்களை வளர்த்தெடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
News November 14, 2025
பிஹார் தேர்தல் முடிவு: எந்த நேரத்திலும் மாற்றம்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் கூட மாற்றம் ஏற்படும் என தெரிகிறது. NDA – 91 இடங்களிலும், ஆர்ஜேடி – காங்கிரஸின் மகா (MGB) கூட்டணி 63 இடங்களிலும், ஜன்சுராஜ் 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. குறிப்பாக, NDA கூட்டணி வேட்பாளர்கள் பலர் 2000 முதல் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே முன்னிலையில் இருப்பதால், எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.


