News December 3, 2025

மயிலாடுதுறையில் 117 வீடுகள் சேதம்

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சீர்காழி வட்டத்தில் இதுவரை 117 வீடுகள் சேதமடைந்துள்ளன. 106 கூரை வீடுகள் மற்றும் 9 ஓட்டு வீடுகள் பகுதியாக சேதம் ஏற்பட்டுள்ளது. 2 ஓட்டு வீடுகள் முழுமையாக சேதம் என மொத்தம் 117 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 4, 2025

மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு!

image

TNUSRB நடத்தும் காவல் சார்பு ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்காக மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் இலவச மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தேவையான ஆவணங்களுடன் வேலை வாய்ப்பு மையத்தை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்

News December 4, 2025

மயிலாடுதுறை: போக்குவரத்து நிறுத்தம்

image

கொள்ளிடம் அருகே வடரங்கத்தில் இருந்து உச்சிமேடு பாலுரான்படுகை உள்ளிட்ட 10 கிராமங்கள் வழியாக மாதிரிவேளூர் செல்லும் சாலையில் அரசடி என்ற இடத்தில் சாலை சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு கனமழையால் இரண்டாக பிளந்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல கிராமங்களுக்கு பிரதான சாலையாக விளங்கும் இந்த சாலை மூடப்பட்டதால் கிராம மக்கள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்

News December 4, 2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (டிச 5) காலை 10 மணி முதல் 5 மணி வரை நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்பு தொகைகள் காப்பீட்டு தொகைகள் மற்றும் பங்கு தொகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு முகாம் அந்தந்த வங்கி கிளைகளில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டெடுக்க அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றுகளுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்

error: Content is protected !!