News April 27, 2024
பலாபழம் எடுத்த சென்ற காட்டு யானை

கூடலூர் மார்த்தோமா நகர் பகுதியில் நேற்று இரவு (ஏப். 26) காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சாலையோர பலாப்பழம் கடையிலிருந்து காட்டு யானை ஒன்று பழத்தை எடுத்து செல்வதை கண்டனர். உடனே போலீஸ் வாகனம் சைரன் ஒலிக்க செய்து யானையை விரட்டினார்கள். வறட்சி காரணமாக வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி உலா வருவது வாடிக்கையாகி வருகிறது.
Similar News
News March 5, 2026
நீலகிரி: டேட்டிங் ஆப்-ல் இளம்பெண் மோசடி

நீலகிரியை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் டேட்டிங் செயலியில் அறிமுகமான பெங்களூருவை சேர்ந்த ஜெயஸ்ரீ ஸ்வேதா என்ற இளம் பெண்ணின் பேச்சில் நம்பிக்கை வைத்து ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தார். முதலில் ரூ.43 ஆயிரம் முதலீட்டில் லாபம் கிடைத்ததால், ரூ.20 லட்சம் வரை செலுத்தினார். பின்னர் பணம் திரும்ப கிடைக்காமல், தொடர்பும் துண்டிக்கப்பட்டதால், ஊட்டி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
News March 5, 2026
நீலகிரி: பேருந்து நிலையத்தில் குடியேறிய போராட்டக்காரர்கள்

நீலகிரி: நெல்லியாளம் நகராட்சி செட்டிவயல் பகுதிக்கு சாலை வசதி கோரி 2வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. காலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். இன்று மாலை விடுதலை செய்யப்பட்ட போராட்ட குழுவினர், போராட்டத்தை கைவிடாமல் பந்தலூர் பேருந்து நிலையத்தில் குடியேறி மீண்டும் சாலை வசதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
News March 4, 2026
நீலகிரி: அரசின் குறைந்த விலையில் சொந்த வீடு! APPLY

நீலகிரி மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் <


