News December 3, 2025
இந்துமத வெறுப்பால் திமுக அரசு அழியும்: நயினார்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடாது என முறையிட்டு தனது இந்து மதவெறுப்பை திமுக அரசு மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளதாக நயினார் சாடியுள்ளார். மதச்சார்பின்மை வேடமிட்டு இந்து மதத்தை குறிவைத்துத் தாக்கும் திமுக அரசின் மேல்முறையீட்டு முறியடிக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார். மக்களின் மதநம்பிக்கையை புண்படுத்தும் திமுக அரசு தூக்கியெறிப்படும் எனவும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 3, 2025
கனமழை… அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலியாக அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
Cinema 360°: ₹62.47 கோடி வசூலித்த தனுஷின் இந்தி படம்

*அனுபமாவின் ‘லாக்டவுன்’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது *தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ இந்தியாவில் மட்டும் இதுவரை ₹62.47 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு *திவ்ய பாரதி நடித்துள்ள ‘GOAT’ டீசர் வெளியாகியுள்ளது. *அவெஞ்சர்ஸ்: டூம்ஸ் டே டீசர் டிச.7-ம் தேதி ரிலீசாகிறது. *பசுபதியின் ‘குற்றம் புரிந்தவன்’ வெப் தொடர் டிச.5 முதல் சோனி லைவ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
News December 3, 2025
சிரஞ்சீவியை போல் விஜய் சறுக்குவார்: தமிழருவி மணியன்

அதிமுக அணியில் தவெக இடம்பெற EPS-ஐ CM வேட்பாளராக விஜய் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழருவி மணியன் கூறியுள்ளார். இதற்கு வாய்ப்பில்லை என்ற அவர், இதனால் கூட்டணி அமையவும் வாய்ப்பு கிடையாது என தெரிவித்துள்ளார்.. மேலும், எப்படி ஆந்திராவில் சிரஞ்சீவி ஒரு அனுபவத்தைப் பெற்றாரோ அதே அனுபவத்தை விஜய் பெறுவார் எனவும், சிரஞ்சீவியை போல் கண்டிப்பாக சறுக்குவார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


