News April 27, 2024
பட்டாசு வெடித்ததில் முதியவர்
கொடியாலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கோவில் பத்து கிராமத்தில் உள்ள தூண்டி வீரன் கோயிலில் ஆண்டு பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் வாகனங்களில் குதிரை, சுவாமி சிலைகளை ஏற்றி வரும்போது பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது அதிக சத்தத்தோடு பட்டாசு வெடித்ததில் முதியவர் பயந்து ஓடியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 20, 2024
நாகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நாகை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10-ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்த வேலைவாய்ப்பற்ற ஆண் மற்றும் பெண்கள் பங்கேற்று பயன் பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார். SHARE IT
News November 19, 2024
நாகூர் சந்தனக்கூடு திருவிழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டை
சென்னை முகாம் அலுவலகத்தில், இன்று நவம்பர் 19, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகூர் தர்கா தலைமை நிர்வாக அறங்காவலர் சையது முகமது காஜி ஹுசைன் சாஹிப் இடம் வழங்கினார். உடன் இந்த நிகழ்வில் நாகூர் தர்கா நிர்வாக உறுப்பினர்கள் இருந்தனர்.
News November 19, 2024
இ – சேவை மையங்களில் சான்று கட்டணம் நிர்ணயம்
இ – சேவை மையங்களில் பொதுமக்கள் பெறும் சாதி இருப்பிட சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகளுக்கும் அதிக பட்சமாக ரூ.60-ம் முதியோர், விதவை உள்ளிட்ட ஓய்வூதிய சான்றுகளுக்கு ரூ.10-ம் திருமண உதவி திட்ட சான்றுகளுக்கு ரூ.120-ம், மின்கட்டணம் ரூ.1000 வரை ரூ.15ம் அதிகபட்சமாக ரூ.60 வரை மட்டுமே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.