News April 27, 2024
IPL: 523 ரன்கள், 42 சிக்சர்கள் விளாசி சாதனை

பஞ்சாப், கொல்கத்தா அணிகள் கூட்டாக 523 ரன்கள், 42 சிக்சர்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளன. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா, 18 சிக்சர்களுடன் 261 ரன்கள் குவித்தது. சுனில் நரேன் 71 ரன்களும், பில் சால்ட் 75 ரன்னும் விளாசினர். பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி, 24 சிக்சர்களுடன் 262 ரன்கள் குவித்து சேசிங் செய்தது. ருத்ரதாண்டவமாடிய பேர்ஸ்டோ 108, சஷாங் 62, சிம்ரன் 54 ரன்கள் விளாசினர்.
Similar News
News January 26, 2026
PM மோடியும்.. குடியரசு தின டர்பனும்!

ஒவ்வொரு ஆண்டும் PM மோடி, குடியரசு தின விழாவில் பங்கேற்கும் போது, அவரின் தலைப்பாகை(டர்பன்) தனி கவனம் பெறுகிறது. ராஜஸ்தானி தலைப்பாகை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள அவர், அதன் நிறத்தை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் மாற்றுகிறார். 5 மீட்டர் துணியில் தயாரிக்கப்படும் இந்த தலைப்பாகை சுயமரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது. 2015- 2026 வரை PM மோடி அணிந்த தலைப்பாகைகளை மேலே அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம்.
News January 26, 2026
BREAKING: நடிகர் ரஜினி சொன்ன அரசியல் திருப்பம்

நடிகர் ரஜினியுடன் நேற்று நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடல் குறித்த கவிஞர் வைரமுத்துவின் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு திருப்பம் குறித்தும் ரஜினி சொன்னபொழுது தான் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்தும் விவாதித்ததாகவும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
News January 26, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <


