News April 27, 2024

50%க்கும் கீழ் குறைந்த வாக்குப்பதிவு

image

இந்திய தேர்தல் ஆணையம் 100% வாக்குப்பதிவு என்ற பிரசாரத்துடன் மக்களவைத் தேர்தலை நடத்தி வருகிறது. இதில் நேற்று உ.பி.,யில் 8 தொகுதிகளுக்கு நடந்த 2ஆம் கட்டத் தேர்தலில் 54.85% மட்டுமே வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அம்ரோகாவில் 64.02%, மிகவும் குறைந்தபட்சமாக நடிகை ஹேமமாலினி களமிறங்கிய மதுராவில் 49.29% (50%க்கும் கீழ்) வாக்குகள் பதிவாகியுள்ளது.

Similar News

News February 4, 2026

‘வருங்கால முதல்வரே வருக வருக’.. கடுப்பான வைகோ

image

மயிலாடுதுறை அருகே கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு சென்ற வைகோவை பார்த்து, ‘வருங்கால முதல்வரே வருக வருக’ என மதிமுக தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர். இதை சற்றும் எதிர்பார்க்காத வைகோ, தொண்டர்களை கடிந்து கொண்டார். இதன்பின் அவர் பேசுகையில், மதிமுக பெரிய வாக்கு வங்கி உள்ள கட்சி இல்லை என்றும், மதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே, நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எப்போதும் கூறியது இல்லை எனவும் தெரிவித்தார்.

News February 4, 2026

பில் கேட்ஸ் பதில் சொல்லியே ஆகனும்: மெலிண்டா

image

<<18548710>>எப்ஸ்டீன் கோப்புகளில்<<>> வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் தனக்கு விவரிக்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக பில் கேட்ஸின் Ex மனைவி மெலிண்டா தெரிவித்துள்ளார். தன் மகள் வயதில் இருக்கும் அச்சிறுமிகளை பார்க்கும்போது இதயம் நொறுங்கி விட்டது என்றும், இதில் தொடர்புடைய பில் கேட்ஸ் உள்பட அனைவரும் இதுகுறித்து எழுப்பபடும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News February 4, 2026

ஆன்லைன் கேமிங்.. பெற்றோரே உஷாரா இருங்க

image

ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையானதால் <<19045972>>3 சகோதரிகள் தற்கொலை<<>> செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலையை தூண்டும் சில விளையாட்டுகள் குழந்தைகளை தவறாக பாதைக்கு வழிநடத்துகின்றன. இதனால்தான் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் குழந்தைகள் SM பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளன. நம் நாட்டிலும் பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

error: Content is protected !!