News April 27, 2024

தடுப்புச் சுவரில் மோதி 2 பேர் பலி

image

தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கூலித் தொழிலாளிகள் கார்த்திகேயன் மற்றும் வடிவேல் இருவரும் எதிர்பாராதமாக சாலை தடுப்பில் மோதி நேற்று படுகாயம் அடைந்தனர். சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளிகள் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 5, 2026

திருப்பூர்: பசு மாடு வாங்க ரூ.1,00,000

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News March 5, 2026

திருப்பூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 5, 2026

திருப்பூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>க்ளிக் (<<>>அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!