News December 2, 2025
BREAKING: செங்கல்பட்டுக்கு ஆரஞ்சு ALERT!

டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது, மேலும் முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த மழையானது விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை மையம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அதிக மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும் கூறியுள்ளனர்.
Similar News
News December 3, 2025
செங்கல்பட்டு: தீக்குளித்த சிறுவன் உயிரிழப்பு!

கல்பாக்கம் அருகே புதுப்பட்டினத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் நித்திஷ் (14). 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த புதன்கிழமை இரவு கல்பாக்கம் அணுவாற்றல் குடியிருப்பு மைதானத்தில், நித்திஷ் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நித்திஷ் நேற்று உயிரிழந்தார்.
News December 3, 2025
செங்கல்பட்டிற்கு விடுமுறை அறிவிப்பு!

‘டிட்வா’ புயல் காரணமாக இன்று (டிச.3) செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை இன்று (டிச.3) தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, செங்கல்பட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. உங்க எரியா மழை நிலவரம் குறித்து கமெண்ட் பண்ணுங்க!
News December 3, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்துப் பணி காவலர் விவரம்

செங்கல்பட்டில் இன்று (டிச.2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


