News April 26, 2024
வறட்டு இருமலை சரிசெய்யும் இலவங்கப்பட்டை

✦குடற்புண்களைக் குணமாக்க உதவுகிறது. ✦வறட்டு இருமலுக்கு அதிமதுரத்துடன் இலவங்கப்பட்டைச் சேர்த்துப் பொடியாக்கி சிறிது சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். ✦சுவாசக்கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது. ✦தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. ✦தலைபாரம் இருக்கும் போது இதை நீர்விட்டு அரைத்து பற்றுப்போட விரைவில் பாரம் இறங்கும். நாள்பட்ட நோய்களுக்கு அருமருந்தாக இலவங்கப்பட்டை உள்ளது.
Similar News
News November 14, 2025
MP, MLA-க்கள் வழக்குகளில் சாட்டையை சுழற்றும் கோர்ட்

MP, MLA-க்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு அதிக முன்னுரிமை தர வேண்டும். விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அது தீவிரமாக கருதப்படும். மேலும், ஐகோர்ட் தடை உத்தரவு காரணமாக நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை 2 வாரங்களில் தாக்கல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது.
News November 14, 2025
அடுத்த மாநாட்டை அறிவித்தார் சீமான்

நாதக சார்பில் வரும் 21-ம் தேதி திருநெல்வேலியில் கடலம்மா மாநாடு நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில், மீனவர்கள் பிரச்னை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்பட உள்ளது. முன்னதாக, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளை பேசும் பொருட்டு நாதக சார்பில் ஆடு – மாடு மாநாடு, மலைகள் பாதுகாப்பு மாநாடு, மரங்களை காப்போம் மாநாடு நடத்தப்பட்டன. அதேபோல், தண்ணீர் மாநாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
சொந்த திறமையால் முன்னுக்கு வர நினைக்கும் ஜேசன்

ஜேசன் சஞ்சய் படிக்கும் போதே, அவரை ஹீரோவாக்க பலரும் முயற்சி செய்ததாக, விஜய்யின் உறவினரும், நடிகருமான விக்ராந்த் தெரிவித்துள்ளார். ஆனால், இயக்குநராகத்தான் சினிமாவில் அறிமுகமாவேன் என்பதில் ஜேசன் சஞ்சய் உறுதியாக இருந்தார். தந்தையின் பெயரை பயன்படுத்தாமல், தனது தனித்திறமையால் சினிமாவில் வெற்றி பெறவே அவர் முயற்சிக்கிறார். இந்த எண்ணமே அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்றும் விக்ராந்த் கூறியுள்ளார்.


