News April 26, 2024
சனியால் சறுக்கல்களைச் சந்திக்கப் போகும் ராசிகள்

கும்ப ராசியில் வக்கிரப் பெயர்ச்சி அடையும் சனி பகவான், நவ.15 வரை அதே நிலையில் பயணிக்கிறார். இதனால் ரிஷபம், கன்னி, துலாம், மகர ராசியினர் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலைத் தவிர்க்கலாம். பிறருக்கு ஜாமின் வழங்குவது சிக்கலை உருவாக்கும். முதலீடுகள், தொழில் தொடங்குவது சறுக்கலை உருவாக்கும். உரிய பரிகாரம் செய்தால் சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Similar News
News August 25, 2025
திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதிப்பு: இபிஎஸ்

திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை என இபிஎஸ் விமர்சித்துள்ளார். திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட அவர், அதிமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் நன்மை அடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காவிரி, கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் கட்டப்படும் என உறுதியளித்தார்.
News August 25, 2025
ராசி பலன்கள் (25.08.2025)

➤ மேஷம் – சோர்வு ➤ ரிஷபம் – செலவு ➤ மிதுனம் – சாதனை ➤ கடகம் – அமைதி ➤ சிம்மம் – நட்பு ➤ கன்னி – மகிழ்ச்சி ➤ துலாம் – வரவு ➤ விருச்சிகம் – தடங்கல் ➤ தனுசு – நலம் ➤ மகரம் – களிப்பு ➤ கும்பம் – சுகம் ➤ மீனம் – மேன்மை.
News August 24, 2025
குட்டி தளபதி பட்டம்… SK மறுப்பு

தன்னை குட்டி தளபதி என்று அழைப்பதை சிவகார்த்திகேயன் மறுத்துள்ளார். ‘மதராஸி’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் ‘கோட்’ படத்தின் துப்பாக்கி பகிரும் காட்சியில் விஜய் சார் எனக்கு ஊக்கமளிப்பதாக உணர்ந்தேன். படம் வெளியான பிறகு பலரும் என்னை குட்டி தளபதி, திடீர் தளபதி என்றெல்லாம் அழைத்தனர். இதை நான் ஏற்கவில்லை. அண்ணன் அண்ணன் தான், தம்பி என்றுமே தம்பி தான் என சிவகார்த்திகேயன் பேச அரங்கம் அதிர்ந்தது.