News April 26, 2024

தூக்கமின்மையை தவிர்க்க…

image

பகல் நேரத்தில் தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இரவு உறக்கம் பிரச்னையே. இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது மற்றும் மனக்குழப்பம் உள்ளிட்ட உளவியல் சிக்கல் இருந்தாலும் தூக்கம் பிரச்னையாக மாறும். தூக்கமின்மையின் காரணமாக எந்த விஷயத்திலும் ஈடுபாடு காட்ட முடியாது. கவனக்குறைவால் மற்ற வேலைகளும் கெடும். மூளையில் சுரக்கும் செரோட்டின் அளவு குறையும் போது தான் தூக்கமின்மை பிரச்னை உருவாகிறது.

Similar News

News November 14, 2025

அடுத்த மாநாட்டை அறிவித்தார் சீமான்

image

நாதக சார்பில் வரும் 21-ம் தேதி திருநெல்வேலியில் கடலம்மா மாநாடு நடத்தப்படும் என சீமான் அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில், மீனவர்கள் பிரச்னை, கடல் வளம் பாதுகாப்பு குறித்து பேசப்பட உள்ளது. முன்னதாக, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளை பேசும் பொருட்டு நாதக சார்பில் ஆடு – மாடு மாநாடு, மலைகள் பாதுகாப்பு மாநாடு, மரங்களை காப்போம் மாநாடு நடத்தப்பட்டன. அதேபோல், தண்ணீர் மாநாடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

சொந்த திறமையால் முன்னுக்கு வர நினைக்கும் ஜேசன்

image

ஜேசன் சஞ்சய் படிக்கும் போதே, அவரை ஹீரோவாக்க பலரும் முயற்சி செய்ததாக, விஜய்யின் உறவினரும், நடிகருமான விக்ராந்த் தெரிவித்துள்ளார். ஆனால், இயக்குநராகத்தான் சினிமாவில் அறிமுகமாவேன் என்பதில் ஜேசன் சஞ்சய் உறுதியாக இருந்தார். தந்தையின் பெயரை பயன்படுத்தாமல், தனது தனித்திறமையால் சினிமாவில் வெற்றி பெறவே அவர் முயற்சிக்கிறார். இந்த எண்ணமே அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்றும் விக்ராந்த் கூறியுள்ளார்.

News November 14, 2025

மாணவர்களுக்கு கூடுதல் சிறப்பு வகுப்புகள்

image

B.Ed, M.Ed படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டிய நடத்த ஏதுவாக, கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்தி பாடங்களை முடிக்க கல்வியியல் பல்கலை., உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கூறிய படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்த காலதாமதமானது. இதனால், நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் 2026 ஜனவரி 9-ம் தேதியில் தொடங்க பல்கலை., திட்டமிட்டுள்ளதால், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!