News April 26, 2024
சர்க்கரை விலை கிடு கிடுவென உயர்ந்தது

சர்க்கரை விலை கடந்த ஒரு மாதத்தில் 4.5% உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள், வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், பழச்சாறுகளின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இதன் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால் சர்க்கரை விலை மளமளவென உயர்ந்துள்ளது. குறிப்பாக சில்லரை விலையில் சர்க்கரை கிலோ ₹50 தாண்டியுள்ளது. வரும் நாட்களில் தேவைக்கேற்ப விலை உயரும் எனவும் தகவல் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 27, 2026
ரயில் தாமதத்தால் மாணவிக்கு ₹9 லட்சம் இழப்பீடு!

ரயில் தாமதத்தால் மாணவிக்கு ₹9.10 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. UP-ன் பஸ்தி மாவட்டத்தை சேர்ந்தவர் சம்ரிதி. கடந்த 2018-ம் ஆண்டு இவர் புக் செய்த ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்ததால் லக்னோவில் நடந்த BSc நுழைவுத் தேர்வை எழுத முடியவில்லை. இதற்காக அவர் நுகர்வோர் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தான், அடுத்த 45 நாட்களுக்குள் இழப்பீடு செலுத்தக்கோரி 7 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது.
News January 27, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News January 27, 2026
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

*இந்தப் பொல்லாத உலகில் எதுவுமே நிரந்தரமல்ல, உங்கள் பிரச்சனைகள் கூட இல்லை. *நீங்கள் கீழேயே பார்த்துக் கொண்டிருந்தால், வானவில்லைக் காண முடியாது. *உங்களை நீங்களே நம்ப வேண்டும். அதுதான் ரகசியம். *வரலாற்றுப் புத்தகங்களில் இருப்பதை விட கலைப் படைப்புகளிலேயே சரியான உண்மைகள் மற்றும் விவரங்கள் அதிகம் உள்ளன. *கனவுகள் எல்லாம் நினைவுகள் ஆகும், நிறைய காயங்களுக்கு பிறகு.


