News April 26, 2024

திமுக நிர்வாகி விபத்தில் மரணம்

image

திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் வடக்கு திமுக இளைஞரணி அமைப்பாளர் பெருமாள் இன்று (ஏப்.26) நெல்லை அருகே ரெட்டியார்பட்டியில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது மறைவுக்கு நெல்லை மத்திய மாவட்ட மற்றும் கிழக்கு மாவட்ட திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து நெல்லை போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 10, 2026

யானைகள் நடமாட்டம்; களக்காடு தலையணையில் குளிக்க தடை

image

களக்காடு புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள தலையணை சூழல் சுற்றுலா பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் இன்று (10.03.2026) முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. அதேபோல் தலையணையை பார்வையிடவும் தடை விதிக்கப்படுகிறது.

News March 10, 2026

திருநெல்வேலி: வாளை கொண்டு போலீசாருக்கு மிரட்டல்

image

கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி(30) கீழநத்தம் பகுதியில் வாளை காட்டி பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரிடம் விசாரணை நடத்த முயன்ற போது போலீசாரையும் வாளை காட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பாளை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மாயாண்டியை நேற்று கைது செய்தனர்.

News March 10, 2026

திருநெல்வேலி: மகனை குத்தி கொன்ற தாய்

image

சிவந்திப்பட்டி கலைக் கோவில் நகரைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் குடித்து விட்டு மதுபோதையில் வீட்டில் தனது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாயாண்டியின் தாயார் மகனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிவந்திபட்டி காவல்துறையினர் மகனை கொலை செய்த தாயாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!