News December 1, 2025
தென்காசி பஸ்ஸில் திருட்டில் ஈடுபட்ட மாமியார், மருமகள்

வாசுதேவநல்லூரை சேர்ந்த முப்புடாதி என்பவர் சங்கரன்கோவிலில் பஸ்சில் ஏற முயன்ற போது அவரது பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் காணாமல் போனது. இது குறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் விசாரணையில் இத்திருட்டில் கோவில்பட்டியை சேர்ந்த வேலம்மாள், அவரது மருமகள் தனலட்சுமி ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 3, 2025
தென்காசி மாவட்டத்திற்கு மஞ்சள் ALERT!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்காசி கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மக்களே வெளியே போன குடை எடுத்துட்டு போங்க…இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News December 3, 2025
தென்காசி: மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியை சேர்ந்த கணபதி மகன் மாயாண்டி கடந்த 8ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மகன் இறந்த துக்கத்தில் மனமுடைந்து இருந்த மாயாண்டி நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்த துக்கத்தில் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News December 3, 2025
தென்காசி: சிலிண்டர் புக் செய்ய புதிய அறிவிப்பு!

தென்காசி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!


