News April 26, 2024
மம்மூட்டியின் நடிப்பைப் பாராட்டிய வித்யா பாலன்

‘காதல் தி கோர்’ படத்தில் மம்மூட்டியின் நடிப்பைப் பார்த்து வியந்த நடிகை வித்யா பாலன், பாலிவுட் சூப்பர் ஸ்டார்களால் மம்மூட்டியைப் போல நடிக்க முடியாது என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். தன்பால் ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர் நடித்திருப்பது ஆச்சரியம் அளிப்பதாகத் தெரிவித்த அவர், துல்கர் சல்மானுக்கு மெசேஜ் செய்து தந்தையிடம் தனது பாராட்டைத் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.
Similar News
News January 31, 2026
உதயநிதி சொன்னதுதான் சரி.. விஜய் பற்றி கேட்காதீங்க!

எங்களை மட்டும் கேள்வி கேட்பது நியாயமா என தவெக குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், DCM உதயநிதி கூறியதுபோல் யாராவது தவெகவினரை கேள்வி கேட்கிறீர்களா? எங்களிடம் மட்டும் கேள்வி கேட்பது என்ன நியாயம்? சந்திக்கவே முடியாமல் not reachable-ல் இருக்கும் விஜய் குறித்து கேட்டு எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கூறினார்.
News January 31, 2026
பிப்ரவரி 13-ம் தேதி ஜன நாயகன் ரிலீஸ்?

‘ஜன நாயகன்’ படம் எப்போது வெளியாகும் என காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக படக்குழு மேல்முறையீடு செய்த நிலையில், சென்சார் போர்டும் SC-யில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்தது. இதனால் படம் வெளியாவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பிப்.13-ல் ஜன நாயகன் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News January 31, 2026
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஜாக்பாட்!

மத்திய பட்ஜெட்டில் TN-க்கு பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்காக சிறப்பு பொருளாதார மண்டலம்(SEZ) அறிவிக்கப்படவுள்ளதாம். மேலும், உதான் திட்டத்தில் ஏர்போர்ட்கள், சாலை, நீர்வழி மேம்பாடுகளுக்கு பல கோடிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. கடந்த பட்ஜெட்டில் பிஹாரில் பேரவைத் தேர்தலை மையாக கொண்டு அங்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.


