News December 1, 2025

சேலம்: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை!

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்யவும். டிச.01 இன்றே கடைசி நாள் ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

Similar News

News December 6, 2025

சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு!

image

சேலம் மாவட்ட காவல்துறை வாகன ஓட்டிகளுக்காக பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்படம் வெளியிட்டுள்ளது. ஓட்டுநர்கள் பயணிக்கும் போது மொபைல் போனை பயன்படுத்துவது விபத்துக்கான முக்கிய காரணமாக இருப்பதால், “You Can’t Do Both – Don’t Text While Drive” என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் பொதுமக்களை, உயிர் பாதுகாப்பை முன்னிறுத்தி, பயணத்தின் போது மொபைல் பயன்படுத்தாமல் கவனமாக ஓட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

News December 6, 2025

சேலம்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

சேலம் மாநகர காவல் துறை சார்பில், போக்குவரத்து விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை இயக்கும் போது, அதிக வெளிச்சம் கொண்ட கண்களை பூச செய்யும் விளக்குகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், இந்த விளக்குகளினால்எதிரே வரும் வாகனங்களில் பயணிப்போர் விபத்திற்கு உள்ளாக நேரிடும் என்பதால், வாகன ஓட்டிகள் இதுபோன்ற விளக்குகளை தவிர்க்க வேண்டும் என அறிவித்துள்ளது.

News December 6, 2025

தலைவாசல் அருகே மின்சாரம் தாக்கி நடந்த சம்பவம்!

image

கெங்கவல்லி தாலுகா ஆணியம்பட்டி புதூரைச் சேர்ந்த தொழிலாளி விஸ்வநாதன் (39) நேற்று தலைவாசல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே கட்டுமானப் பணியில் இருந்தபோது, மேலே சென்ற மின்கம்பி அவரது கையில் தொடுவதால் மின்சாரம் தாக்கி கீழே வீழ்ந்து கடுமையாக காயமடைந்தார். ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் வழியிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. தலைவாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!